பற்றி எரியும் உலகம்

பழகிய இருட்டில் பருந்தானாய்..
உனக்கு நானே விருந்தானேன்..
காயம் ஆற்றிட மருந்தானேன்..
கட்டில் கட்டைகளுக்கு உயிரூட்டி,
கட்டையாய் கிடக்கின்றேன்
இதழ் தேடினாய் ..,இமை மூடினேன்
இடை தேடினாய் ..,இறை வேண்டினேன்
அலைகடலாய் மேனி..
ஆழ்கடலாய் மனம்..
வலையறுந்த சிலந்தி..
வாலிழந்த பல்லி..
நிறமிழந்த வானம்..
எங்கே என் மானம்..?!
பழிச்சொல்லுக்கு பயந்து
'விருப்பமில்லை' என விளிக்கவில்லை
தொண்டைமுள்ளாய் சிக்கும் வார்த்தைகள்
சிதறிபோகின்றன..முனங்குதலாய் !!
மகிழ்ந்தேன் என நினைத்தாய் போலும்
வேகம் ஏறுகிறது உன் அசைவில்,
மன்னிக்கட்டும் மறைவாய்
இருக்கும்,
என் கடவுள்.

எழுதியவர் : கல்கிஷ் (29-Jan-15, 3:46 pm)
Tanglish : patri eriyum ulakam
பார்வை : 219

மேலே