காலமும் கைக்கடிகாரமும்

என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்
மணி ஒன்பது நாற்பது எனக் காட்டியது
மீண்டும் பார்த்தேன்
மூன்று முட்கள் தெரிந்தது..

மீண்டும் ஒரு முறை பார்த்தேன்
காலம் கரைவதாய் தெரிந்தது...

காலத்தை கையில்
கட்டிப் போட்டதாய் தெரிந்தது...

நான் கட்டியிருந்தும் கடிகாரம்
ஓடிக் கொண்டே இருந்தது...

மீண்டும் ஒரு முறை பார்க்க நினைத்தபோது
"சாப்பாடு ஆறுது
எவ்வளவு நேரம் காத்திருப்பது" என்று
அம்மா அழைத்தது காதில் விழுந்தது

அப்போதுதான் புரிந்தது
காலம் நகர்வது
கைக்கடிகாரத்தில் மட்டும் இல்லை என்பது...

எழுதியவர் : ஜின்னா (30-Jan-15, 2:12 am)
பார்வை : 332

மேலே