சில பயணங்கள் o0o சில மனிதர்கள்
அலைபேசி வாயிலாக
அவசர அழைப்பு ...
அள்ளித்திணித்த துணிகளுடன்
அனைவரும் கிளம்பிவிட்டோம்
இரயில் பயணமாக ...
வழித்தேவைக்கு...
வாங்கிய உணவுகளும்
ஏங்கத் துவங்கிவிட்டன
ஏக கூட்டம் ?
வண்டிவிட்டிறங்கி
நடைமேடையருகே
உணவருந்துகையில்
வந்து நின்றார் ...
வயோதிகரொருவர்...?
''மீத உணவினை''
அவரிடமளித்துவிட்டு
நகர்ந்தோம் ...
உள்ளுக்குள் ..ஏதோ
உறுத்திற்று ...
கொஞ்சம் குறைவாய்
சாப்பிட்டிருக்கலாமோ ..?
---------------------------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்