வேண்டாம் புகையிலை
புன்னகை வழியும் உதடுகளில்
புகையிலை சுருட்டை வைப்பது ஏன் ?
அரைகுரையன்னா இன்பத்திற்கு
ஆயுள் தண்டனை வேண்டுமா உனக்கு ?
புவியை ஆளும் சக்தி கொண்ட - நீ
புட்றுநோய் வந்து வீழ்வாய்யடா !
வெளிநாட்டவர்களின் அறிமுகத்தால்
வெள்ளந்தி உயிர்கள் போகுதடா !
புத்தகம் சுமக்கும் கையில் கூட
புகையிலை சுருட்டை கண்டேன்னடா !
புத்தர் சொன்ன போதனைஎல்லாம்
எங்கே மறைந்தது போனதடா !
இமை துள்ளும் வயதினிலே - நீ
இதற்க்கு அடிமை ஆனது ஏன்?
கனவு கண்ட வாழ்க்கையெல்லாம் பாதியில்
கலைந்து போகுமடா !
மரணம் தரும் புகையிலையை
மண்ணொடு புதைத்துவிடு
மனம் மகிழோவோடு வாழ்ந்திடு..!