குறிஞ்சிப் பூக்களின் குமுறல்கள் - உதயா
மாற்றத்தோடு
மாறவே இயலாத இயல்போடு
உருவாகின உறுப்புகள் என்
உடலோடு
பச்ச மண்ணாக இருந்தும்
அழகு சிலையென
பசையில்லாத உடல்தானே ..
திருவோடென கரமேந்தியா
தெருவின் குப்பைதொட்டிற்கு
என்னை பிச்சையாகயிட்டனர்
பெற்றவர்கள்
பாசம் நிறைந்த இருக் கைகள்
என்னை பற்றி அனைத்தன
பிறகுதான் தெரிந்தது
அவையெல்லாம் வேஷமென்று
கவர்ந்து சென்ற கயவனோ
என்னை பிச்சையெடுக்க
சண்டாளன் அந்த கடவுளின்
வாசத்தின் முன் அமரசெய்தான்
கேவலம் நாயாக பிறந்திருந்தாலும்
தன்மானத்தோடு வாழ்ந்திருப்பேன்
ஓரவஞ்சகம் பிரம்மனோ என்னை
ஊனமாகதானே படைத்துவிட்டான்
மழையிலும் வெயிலிலும்
நொந்தாலும் செத்தாலும்
கல்லாக கைகட்டிதானே
பார்க்குறான் கடவுள்
கோவிலுக்குள் சிலையாக
பிச்சையெடுத்த பணம் போதவில்லையாம்
வதைக்கிறான் கடத்தி சென்ற அரக்கன்
மனமில்லா இச்சைகள் தானே
பாதகனை பார்க்க வருகிறார்கள் ..
தலை நிமிர்ந்து பார்த்துவிட்டால்
தையில் நிச்சயம் தலையில்
வாய் திறந்து பேசிவிட்டால்
என் குருதி நிச்சயம் அவன் கையில்
அனல் தீண்ட இடமில்லை
என் தேகத்தில்
பாவி பாதம் தீண்ட நாளில்லை
என் மேனியில்
சாகும் கனம்முன்னே
அக்கடவுளை ஒருநொடிக் காணவேண்டும்
கயவன் அவனைக் கண்ணாலே
சுட்டுப் பொசுக்க வேண்டும் ......

