எப்படி வாழ்வது

சிக்கனமாய் வாழ்ந்தபோது
கருமி என்றானான்
கொடை செய்து வாழ்ந்தபோது
ஊதாரி என்றானான்

அமைதியாய் வாழ்ந்தபோது
கோழை என்றானான்
அதிகாராமாய் வாழ்ந்தபோது
கொடுமையாளன் என்றானான்

பிறருக்காக வாழ்ந்தபோது
புகழ்ச்சிகாரன் என்றானான்
தனக்காக வாழ்ந்தபோது
சுயநலக்காரன் என்றானான்

இப்படி
குறை சொல்லும் உலகம்
சொல்லிக்கொண்டேதான் இருக்கும்

நீ உலகில்
எப்படி இருந்தாலும்
இறந்தாலும்

எப்படி வாழ்வது
என்று குழம்புவதை
விட்டுவிட்டு

என்றும் நேர்வழியிலேயே
வாழ்ந்திடு
வெற்றி ஓர் வழியில்
உன்னை தேடும்!

இதுவரை உன்னை தரித்திரமாய்
நினைத்த உலகமும்
உன் சரித்திரம் பாடும்!

எழுதியவர் : sabiyullah (1-Feb-15, 4:48 pm)
Tanglish : yeppati valvathu
பார்வை : 189

மேலே