நம் நாடு போற்றுவோம் அன்பை வளர்ப்போம் மண்பயனுற வேண்டும் கவிதை போட்டி

நாடு காப்போம்
நாம் கைகோர்ப்போம்
நதிகளை இணைப்போம் -மண்
தாகம் தணிப்போம்
மதவெறி ஒழிப்போம்
மனிதனை நினைப்போம்
சாதிகள் தவிர்ப்போம்
சமத்துவம் படைப்போம்
சக உதிரம் கொடுப்போம்
சகோதரராய் இருப்போம்
அன்பை வளர்ப்போம்
ஆணவம் அழிப்போம்
இருக்கும் வரையில்
ஈதலில் மகிழ்வோம்
உயிர் போனாலும்
உறுப்புகள் கொடுப்போம்
எழுமின் விழிமின்
யாவரும் கேளிர்

எழுதியவர் : சு.ஐயப்பன் (1-Feb-15, 5:34 pm)
பார்வை : 181

மேலே