ஆதலால் காதல் செய்வீர் மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி

காமம் கலவாத காதலும் தாய்பாலே
ஆதலால் காதல்செய் வீர்
காதல் கனிவுற வாழ்தல் அதுவல்ல
தூதியம் இல்லை உயிர்க்கு
சாதிமத கூற்றுக்கு சஞ்சீவி யாதெனின்
காதலே நெல்லிக் கனி
காதல் உயிருக் குயிராகும் அஃதிலார்
சாதல் அடைந்த சவம்
காதல் இருவரின் கற்பு உயிர்நட்பு
ஆதலால் காதல்செய் வீர்

எழுதியவர் : சு.ஐயப்பன் (1-Feb-15, 5:40 pm)
பார்வை : 104

மேலே