நெஞ்சுப் பொறுக்குதில்லையே

நெஞ்சுப் பொறுக்குதில்லையே
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி
*****குதறி விடத்தான் கொலைவெறி
நஞ்சு கலந்து வருவதை
*****நன்க றிந்த நிலையினால்
நெஞ்சுப் பொறுக்கு தில்லையே
*****நேரமைத் திறனு மின்றியே
வஞ்சிக் குமிவர் பிழையினை
*****வளர விட்டக் கொடுமையே

அஞ்சி அஞ்சி வாழ்வதால்
*****அன்னைத் தமிழும் சாகுமே
கெஞ்சிக் கேட்டா லிவர்களின்
*****கொடுமை யின்னும் கூடுமே
பஞ்சில் வைத்த தீயினாய்
*****பாழாய்ப் போகும் தாய்மொழி
பிஞ்சு நாவுகள் சொல்லுமே
*****பிழையாய்த் தமிழைக் கொல்லுமே

’கவியன்பன்” கலாம்

எழுதியவர் : கவியன்பன் கலாம் (1-Feb-15, 8:56 pm)
பார்வை : 80

மேலே