நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் மண் பயனுற வேண்டும்
பழம்பெரும் இந்தியாவில் பழமையான பொருடகள் எல்லாம் திருட்டு போயாச்சு! அடுத்தடுத்து நடந்த பாலியல் வன்கொடுமை மூலம் இந்திய பாரம்பரியத்தையும் கவிழ்த்தாச்சு!
பச்சை பசேலென காணப்பட்ட இயற்கையையும் அழிச்சாச்சு"
நாலாபக்கமும் காணபட்ட நதிநிலைகளெல்லாம் சாக்கடைகளாக்கியாச்சு!
இதை எல்லாம் சீர்திருத்தி புரட்சி காண நினைத்தவார்களெல்லாம் மண்ணோடு மண் போயாச்சு!
உண்ண உணவில்லாதப் போதும் போதை ஏற்றும் மதுவை அருந்த மறக்க இயலாத நீ
உன் தேசத்தை வளர்க்கவும் முடியாது
போற்றவும் முடியாது!
உன்னை நீ மாற்றிகொள்!
உன் தேசம் தானாக வளரும் அன்று அண்டை தேசம் உன் தேசத்தை உலகம் போற்றத் துதிப் பாடும்!