மண் பயனுற வேண்டும்
விளைந்த நெல்மணிகள் பதருகளாகக்கண்டு
துடித்த ஓரேர் உழவன் பயிரின் வேருக்கடியில்
உயிர்வேரை விட்டதைப் படித்து உச்சுக் கொட்டி
உணவை உணர்ச்சியற்று உண்ணுகிறோம் !
சேயென பாவித்து செவ்வனே பயிறிட்ட கரும்பு
விலை சரியக்கண்டு உயிரை சரியவிட்ட
விவசாயத்தின் வலிப்பகுதியை வாசித்து
விடைபெரும் வஞ்சக உலகத்தில் வாழ்கிறோம் !
வேளாண்மை படித்தவனும் கடந்து போகிறான்
உயிர் விட்ட உழவனின் கல்லறைதாண்டி.
மண்வளம் கண்டு இன்ன பயிர்விளையும்
இவ்விடத்திலென இன்னுமேன் சொல்லாதிருக்கிறாய் ?
புழுவுண்ட மண்ணில் விதைதனை விதைத்து
விளை பயிரால் விலைஉயிரைக் காத்திடுவோம்
சிறுகுறு உழவனை ஒன்று சேர்ந்து பயிரிட்டு
நலம் பெற உதவிடுவோம் அலைப்பேசி எண்கொடுத்து !
ஒன்றிணைந்து மொழிந்திடுவோம் ஓர்தாய்மக்களாக
ஊட்டிடுவோம் உழவனில் உயர் கல்வியை !
இயற்கை உரமிடுவோம் நிலைவிலை விளைபொருளாக
தடுத்திடடா தற்கொலைசெய்யும் இறைவன்களை !