நெஞ்சு பொறுக்குதில்லையே---மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி

என் அப்புச்சியும் அப்பத்தளும்
இயற்கையுடன் ஒன்றி வாழ்த்து

வீட்டுக்கு வீடு கனி தரும் மரம் வளர்த்து
இயற்கையிடம் இருந்து மண்ணரிப்பையும்
இயற்கை பசளையிட்டு பாதுகாத்து கொடுத்து போன
அட்சயா பாத்திரம் தான் மண்.என்பதை மறந்து.
எங்களுக்கு
பிளாஸ்ரிக் நாகரிகமாய் போச்சு
மண்ணின் பெருமையும்
மறந்தே போச்சு...

அதிகமாய் விளைச்சல் செய்ய
விதம் விதமாய்
ரசாயண கலவையும்
செயற்கை பசளையும்
செயற்கை மழையும்
அவசியமாய் போச்சு .. ..
ஆகையால்
மண்ணில் உப்பும் கலப்படமாகி
மண்ணை பதமாகும்
நுண்ணுயிர்கள் அழிந்து போச்சு

..
வீட்டு உணவுகள் வெறுப்பாயும்
துரித உணவம்
நாகரிகமாய் போச்சு---- அன்று
வாழ்த்த மனித இனத்தின் ஆயுள்
இருநுறு ஆண்டுகளாம்
ஆராட்ச்சி கூறுகின்றது .---ஆனால்
இன்றைய மனிதன் ஜம்பதை தாடினாலே
சாதனையாய் போச்சு

அவசரமில்ல அலைபேசிகளும்
அவசியமில்ல வாகனங்களும்
தேவையில்ல
மின் உபயோகமும்
சுத்தமான காற்று கூட
விசமாய் மாற்றி போச்சு...


விஞ்ஞான வளர்ச்சியை கண்டு
உலகமே வியர்த்து நிக்கிறது..
அழிவது மனித இனமும் என்று
அறிந்தும் அறியாதது போல் ----அன்று
மருந்துவமனைகள் அதிகம் இல்லை
அவசியமும் இருக்கவில்லை .......
பூகம்பமும் இல்லை
சுனாமியும் இல்லை
சூரியனில் அதிக வெப்பமும் இல்லை
மழைக்கு பஞ்சமும் இல்லை

மரங்களை வெட்டதீகள்
மண்ணை அல்லதீர்கள்
என்று அறிவிதல்கள் பல வந்தாலும்
இந்த பணத்தாசை விடுபதில்லை..........

நாளைய தலைமுறைக்கு பணம் வேண்டாம் ..
சுற்றமான காற்றையும்
சுகாதாரமான
சூழலையும்
விஷதன்னையில்ல
மண்ணையும் கொடுத்து போங்கள்........


அஞ்சலி.சி
.சென்னை இல் இருந்து
உங்கள் வீடுகளை மட்டும் அல்ல சுற்று சூழலையும்
பேணி பாதுகாத்து வையுங்கள் ....

எழுதியவர் : அஞ்சலி (2-Feb-15, 11:15 am)
பார்வை : 163

மேலே