போர்வைக்கனல்

காதற்பாலில்
கடைந்தெடுத்த
இன்பத்து நெய்யூற்றி
உணர்வை சமைக்க
நீ நெருங்கயில்
தானாய் பற்றியெரிக்கும்
கண்காணா சுவாலையொன்று.
என் முத்தங்கள்
ஒவ்வொன்றும்
உன் வெட்கத் திரையில்
மோதி மோதியே
முறிந்துப் போவதை
கண்கொட்ட இரசித்தபின்பு
அதனிருக்கம் தளர
அட்சயக்கிடங்காய்
என் உதடுகள்.
அகடுமுகடென
நீ நெளிந்துக்கீறயில்
உடைக்கப்பட்ட
செம்பாதைகள்
யார் வழிதவர
என் முதுகில்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (4-Feb-15, 12:42 am)
பார்வை : 56

மேலே