என்னை காணவில்லை
என் மோனத்தின்
விளிம்புவரை
உதிர்ந்துவிழும்
கண்ணீர் குமிழியின்
வெட்ப காற்றில்
இடிகிறது இதயம்!!
இதய அறை
சுவர்கள் எங்கிலும்
படர்ந்திருக்கும்!!
உன் புன்னகையும்
குறும்பும்! !
மெளனமும்!
வெட்கமும்!
மோகனமும்!
சுவர்களை
கிழித்துக்கொண்டு
ஆவேசமாய்
வெளியேறுகின்றன!!
ஒவ்வொன்றும்
ஒவ்வோர் திசையில்
எதிர்ப்பட்ட என்
இன்பங்களை
எரித்துவிட்டு
திரையிடுகின்றன
இதயச்சுவர்களை!!
இன்ப சாம்பல்களில்
ஏதோ ஒன்று
உருவம் தரித்து
காதலியே உனை
தேடி நகர்கிறது!!!
அதிலிருந்து
உதிர்ந்து விழும்
சாம்பல் எங்கிலும்
கவிதையொன்று
நான் எனும்
தலைப்பில்...
கிளறிப்பார்த்ததில்
நீ மட்டுமே
இருக்கிறாய்
கவிதையாய்!!
என்னை காணவில்லை