வேதனை
நீ என் காதலை மறுத்த
அந்த வேளையில்..
மாலை நிலவும்
பனி துளியாய்
கண்ணீர் வடித்தது ..
நீ மிதித்து சென்ற
புற்கள் கூட
நிமிர்ந்து நின்று
ஆறுதல் சொன்னது..
ஏனோ..
உனக்காக கொண்டு வந்த
பூக்கள் மட்டும்.
விவரமறியாது என்னை பார்த்து
கேலியாய் சிரித்தது..