காதல் காதல் காதல்

அகரமுதலியிலும் பொருள் இல்லை நின்
அல்லிவிழி பார்வை
சொல்லியது யாது ..............?

பித்தும் பிடித்துவிட்டது
அதை எண்ணி எண்ணி காச்சலில்
பத்தும் கிடைத்துவிட்டது

சத்தம் அற்ற பொருள் உள்ளே
யுத்தம் நடத்துதடி
நித்தம் உன் நினைவு மனதை
குத்தி குடையுதடி

இரவில் உறக்கம் இல்லை
அதற்கும் இரக்கம் இல்லை
மனதில் பறக்கும் மின்மினிக்கு
என்னில் விளக்கம் ஏதும் இல்லை

காதல் சதை கிழித்து, பெருகும் குருதியை
காமம் அனுபவித்து ருசிக்கிறது
பரிதவித்து நிற்கும் எனக்கு உந்தன்
வெகுதொலைவு வலிக்கிறது

எழுதியவர் : கவியரசன் (4-Feb-15, 1:25 pm)
பார்வை : 54

மேலே