ஆதலினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி -Mano Red

மூச்சுப்புகா பேருந்து நெரிசலில்
கொச்சை இச்சை சுகத்திற்கு
அங்கமெங்கும் சல்லடையாய்ச் சுரண்டி
தேகப்பிச்சை எடுக்கும் அற்பப் பிறவிகள்..!!

அரை வெளிச்ச அறையில்
அரைகுறை அவிழ் ஆடையில்
ஆடித்தழுவி போதைக் கிறக்கத்தில்
அந்தரங்கம் தொலைக்கும் நவீன இளசுகள்..!!

சமூக வலைத்தள சேட்டைகளிலும்,
ஆபாச வன்முறை காட்சிகளிலும்,
நல்லுறவைக் கொன்று தின்று
வல்லுறவைத் தேடும் விஷக் கிருமிகள்..!!

தீண்டலும் தூண்டலும் தரும்
சல்லாபச் சுகமே காதலென
புதுவிளக்கம் புத்திக்கு கொடுத்து
புதுமை புகுத்தும் நாகரீகக் கிறுக்கர்கள்…!!

காம இச்சை சுகத்தை புறந்தள்ள,
ஈருயிரை அன்பில் ஓருயிராக்க,
மென்மை உறவின் நரம்பேற்ற,
ஆதலினால் செய்வீர் புனிதமாய்க் காதல்..!!


==============================================
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
பெயர் : மு.மனோ ரெட்
வயது : 25
முகவரி – 2/43 ராமச்சந்திரபுரம்,விளாத்திகுளம்,தூத்துக்குடி
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 9600788986

எழுதியவர் : மனோ ரெட் (4-Feb-15, 1:43 pm)
பார்வை : 138

மேலே