விழித்திரு ……
கடவுள் தூங்கினால்
சாத்தானுக்கு கொண்டாட்டம் ……!
கண்கள் தூங்கினால்
கனவுகளுக்கு கொண்டாட்டம் ……!
தர்மம் தூங்கினால்
அதர்மத்திற்கு கொண்டாட்டம் ……!
மக்கள் தூங்கினால்
அரசியல்வாதிக்கு கொண்டாட்டம் ……!
வறுமை தூங்கினால்
ஏழைகளுக்கு கொண்டாட்டம் ……!
இளைஞனே நீ தூங்கினால்
இந்த உலகிற்கு திண்டாட்டம் ……!