என் கண்ணீரும் கண்ணீர் விடுகிறதே ……………………
உன் மூச்சுக் காற்று தந்து
உயிர்த்தந்தாயே
உன் பிரிவு
உயிர்க் கொல்லியா கொல்லுதே
அம்மா அம்மா !
உன் வாசமின்றி
உயிரற்ற சுவரும்
உண்மையாக அழுகிறதே
உன் நிழலின்றி
உச்சி வெயிலும்
உறங்காமல் தவிக்குதே
அம்மா அம்மா !
உன் விரலால்
ஊட்டியப் பொழுதெல்லாம்
உன் ரேகையையும்
உன்னேனே
அம்மா அம்மா !
நீ சமைக்காத
உணவை
என் கை
எடுக்கவும் மறுக்குதே
அம்மா அம்மா !
உன் கதைகளில்
உன் பாசத்தை வைத்து
உன் குரலில் கதைகளை
உற்சாகமாகக் கேட்டேனே
அம்மா அம்மா !
நீ சொல்லு கதைகளிலெல்லாம்
நான் மட்டுமே ராஜா
உன் கதைகளை கேட்காத இன்று
நானோ குஜாவானேனே
அம்மா அம்மா !
உன் சொந்தம்
உலகிலேயே நான் மட்டும் தானென்று
உரிமையோடு
உரக்கச் சொன்னாயே
அம்மா அம்மா !
நீ இல்லையென்று
செய்திக் கேட்கும் போது
என் கண்ணீரும்
கண்ணீர் விடுகிறதே
அம்மா அம்மா !