ஆதலினால் காதல் செய்வீர் -மண் பயனுற வேண்டும் போட்டிக் கவிதை
 
            	    
                விண்ணிருந்து வீழும் நீர் பூக்கள் 
சொல்வதற்கு ஏதும் இருப்பதில்லை 
மண்ணோடு அது கொண்ட நேசம் ...........,
வீழ்த்திடும் இலை சருகுகளால் 
சுமை ஏதும் இல்லை மண்ணுக்கு 
 தளிர் வேர்களின் சுமை தாங்கும் 
சருகுத் துணுக்குகள் ..............,
அழும் பூக்களின் 
கண்ணீரால் 
நனைகிறது  மண் 
கொஞ்சம் .............,
மண்ணிற்கு ஈரம் இல்லாமல் இல்லை ..........,
உன்னிலும் நேசம் இல்லாமல் இல்லை ..........,
ஆனால் 
அது மண் மீது 
இல்லை .........,
ஆதலால் காதல் செய்
மண்ணுடன் நீயும் 
மனம் பெற வேண்டும்............,
	    
                
