நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

சாதிப் புழுதியில் புரண்டு,
சாக்கடையில் கிடந்தென்ன பயன்.
சக்கரை என்றால் இனிப்பதில்லை
சமத்துவ பேச்சிங்கு நிலைப்பதில்லை.
எங்கெங்கும் காணினும் சக்தியடா!
பாரதி கனவு பொய்த்ததடா!
விவசாயம் தொலைத்த உனக்கு
விண் மழை எதற்கு?
கணக்கில்லா பணம் மூட்டைகட்டி
வெளிநாட்டு வங்கியில் விதைத்துவிட்டு
விலாசமில்லாத வேடம் எதற்கு?
பஞ்சமில்லை கையூட்டுக்கு இங்கு
பஞ்சத்தில் பிழைக்கும் ஏழைகளின்
கண்களில் மண்தூவும் பிழைப்பெதற்கு?

கலங்கப்படுத்தும் விளையாட்டில் நம்
காமவீரர்கள் கை தேர்ந்தவர்கள்.
நெஞ்சம் பொறுக்கவில்லை இறைவா?
இவர்களை திருத்த வா?- இல்லையேல்
நீ திருந்தி வா..
உலகழித்து மனிதமிருகம் மட்டும் விட்டுசெல்...

எழுதியவர் : கவிக்கண்ணன் (5-Feb-15, 5:21 pm)
பார்வை : 219

மேலே