ஆதலினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதைப்போட்டி

காதல் உன்னைப் புனிதமான
மனிதனாக்கி கௌரவிக்கும்!

*


சாதிமத யுத்தங்களை வீழ்த்தி
இந்த ஜகத்தினைப் பல்லாயிரம்
யுகச்சுழற்சி வரை நீட்டித்து
காதல் வளர்ச்சிபெறும்...

*


சமத்துவம் என்னும் மகத்துவம்
மண்ணைத்தொட்டு விண்ணைமுட்டுமே!

*


நானிலங்களையும் நன்னிலமாக்கி
இந்திய மாநிலங்களில்
நல்லரசுகளை விதையிட்டு வல்லரசாக்குமே!

*


இந்தியப் பாரம்பரியம்
கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம்
அனைத்தையும் அங்கீகரிக்குமே!!!

*


இந்திய தேசத்தின்
துருவப் புருவங்களைக்கண்டு
கண்டங்களின் கண்களும் காதலிக்குமே...!


ஆதலினால் காதல் செய்வீர்!!!

*********************************-*******

எழுதியவர் : திருமூர்த்தி.v (5-Feb-15, 7:50 pm)
பார்வை : 95

மேலே