தவற விடுதல்
![](https://eluthu.com/images/loading.gif)
பணி முடிந்த
உன் மாலை
எப்போதும் அழகுதான் !
உனக்குக்
கிடைக்கும்
பேருந்தின்
ஜன்னலோர இருக்கை
பாக்கியம் செய்திருக்கவேண்டும் !
பயணச்சீட்டு
கொடுக்கும்போது
உன்னைக் கண்டிப்பாய்
சைட் அடித்திருப்பான்
அந்த நடத்துனன் !
உன் கூந்தல்
கலைத்து
விளையாடும்
ஜன்னல் காற்றைச்
செல்லமாய்க் கோபித்து
கைப்பை திறந்து
கைக்கண்ணாடியில்
முகம் பார்த்து
கைக்குட்டையில்
முகம் ஒற்றி
புன்னகைத்துக் கொள்வாய்
நீ !
பேருந்தின்
ஏ ஆர் ரஹ்மான்
வழக்கம் போல
உன்னைத் தாலாட்ட
குட்டிப் புன்னகையுடன்
குட்டித் தூக்கம்
போடும் நீ
நிறுத்தம் வந்ததும்
மெல்லிய திடுக்கிடலுடன்
கையிலிருந்தது
நழுவியது தெரியமால்
இறங்கிப்போவதில்
உன்னைத் தவறவிட்டிருக்கும்
நீ
முகம் துடைத்த
அந்தக் கைக்குட்டை !