வாழ்க்கை கொண்டு வருவாயோ சே_ப

வசந்தம் விரைந்து
வாசல் வந்து
தொலைந்ததேனோ....!

தென்பொதிகை சாரல்
எம்மை நணைக்காமல்
சென்றதேனோ....!

சங்கீதமும் ஓலமாச்சே...!
மென் குளிரும்
வெப்பமாச்சே.....!

தேன் சொரியும் மலரிலின்று
திராவகம் தான்
சொரிவதேனோ.....!

விடியாத இரவில்
இன்று நெடுந்தூர
பயணமோ....!

என் இதய அறையில்
நீ தாழிட்டு அதில்
ஜன்னல் ஓரம் பார்ப்பதேனோ.....!

சிக்கெடுத்த உன்
கூந்தலில் என்னை
சிறை வைத்ததேனோ....!

காதல் பார்வையை உன்
விழியோரம் வீசிச் சென்று,

வீம்பு பிடித்தவள் போல்
என்னை விரட்டி
அடிப்பதேனோ.....!

கள்ளச் சிரிக்கியே
என்னில் களவாடிய
பொழுதுகளை திருப்பி
கொடுத்துவிடு...!

இல்லையேல்!

காலம் கடத்தி சென்று
என்னை புதைத்து விடு....!

இனி அழுவதற்கும்
என் விளித்திரையில்
ஈரம் இல்லை....!

எஞ்சி இருக்கும்
என் இதய நாளங்களில்
உன் நினைவுகள் நீந்துவதால்
உயிரை பிடித்து கொண்டுள்ளேன்...

வாழ்வு கொண்டு வருவாயோ......!

எழுதியவர் : சேர்ந்தைபாபு.த (6-Feb-15, 12:27 pm)
பார்வை : 243

மேலே