நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

... நெஞ்சு பொறுக்குதில்லையே ...
பாரதத்தை பங்கு போடும்
பட்டத்தரசர்களே!
நாட்டுப்பற்று கொன்று
நாடாளும் நல்லவர்களே!
வறுமையை ஒழிப்போம்,
என்றுதான் வந்தீர்கள்....
நாட்டு வளத்தையெல்லாம் சுரண்டி,
ஊர்வலம்தான் வருகிறீர்கள்....
பஞ்சுத் தலையனையில்
படுத்துறங்கும் சுகம் கண்டீர்,
எங்கள் பஞ்சம் தீர்க்கவேண்டி
என்னென்ன பாடுபட்டீர்....
நிஜத்திலே ஊழலின்,
உண்மையான பொருள் கண்டீர்....
வறுமை எங்களோடு
வாழ்ந்துவிட்டு சாகட்டும்,
ஊழலும் நீங்களும்
ஒழிந்தாலே அது போதும்.....