திருமுருகன்கரூர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : திருமுருகன்கரூர் |
இடம் | : கரூர் |
பிறந்த தேதி | : 23-Apr-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 8 |
முப்பங்கு சமுத்திரத்தால் மூழ்கடித்த உலகமிதை
அப்படியே அழிக்கவந்த அரக்கர்கள் கூட்டமிங்கே,
...மிரளவைத்து பயமுறுத்தி மிகையாக வற்புறுத்தி
...தரமற்ற பொருள்விற்க தந்திரமாய் விளம்பரங்கள் !
தேர்தலதன் வீரமதை தெரியாமல் கைநீட்டி
அர்த்தமற்று இலவசத்தின் அடிமையான வாக்காளர் !
...கல்விதரும் கூடங்கள் கணக்கில்லை அவனியிலே,
...பல்கலையோ வரண்டுபோகப் பணம்பறிக்கும் எண்ணங்கள் !
உயிர்சாயம் உலர்ந்துபோன உழைப்பாளி வறுமையிலே,
மயிர்சாயம் பூசிவாழும் மந்திரிகள் மமதையிலே !
...வலிதீர்க்கும் மருத்துவத்தை வருமானப் பாதையாக்கி
...பலியாக்கி வறியோரைப் பதம்பார்க்கும் மூர்க்கர்கள் !
ஆன்மீக அருமையினை அடகுவைக்கும்
... நெஞ்சு பொறுக்குதில்லையே ...
பாரதத்தை பங்கு போடும்
பட்டத்தரசர்களே!
நாட்டுப்பற்று கொன்று
நாடாளும் நல்லவர்களே!
வறுமையை ஒழிப்போம்,
என்றுதான் வந்தீர்கள்....
நாட்டு வளத்தையெல்லாம் சுரண்டி,
ஊர்வலம்தான் வருகிறீர்கள்....
பஞ்சுத் தலையனையில்
படுத்துறங்கும் சுகம் கண்டீர்,
எங்கள் பஞ்சம் தீர்க்கவேண்டி
என்னென்ன பாடுபட்டீர்....
நிஜத்திலே ஊழலின்,
உண்மையான பொருள் கண்டீர்....
வறுமை எங்களோடு
வாழ்ந்துவிட்டு சாகட்டும்,
ஊழலும் நீங்களும்
ஒழிந்தாலே அது போதும்.....
... நெஞ்சு பொறுக்குதில்லையே ...
பாரதத்தை பங்கு போடும்
பட்டத்தரசர்களே!
நாட்டுப்பற்று கொன்று
நாடாளும் நல்லவர்களே!
வறுமையை ஒழிப்போம்,
என்றுதான் வந்தீர்கள்....
நாட்டு வளத்தையெல்லாம் சுரண்டி,
ஊர்வலம்தான் வருகிறீர்கள்....
பஞ்சுத் தலையனையில்
படுத்துறங்கும் சுகம் கண்டீர்,
எங்கள் பஞ்சம் தீர்க்கவேண்டி
என்னென்ன பாடுபட்டீர்....
நிஜத்திலே ஊழலின்,
உண்மையான பொருள் கண்டீர்....
வறுமை எங்களோடு
வாழ்ந்துவிட்டு சாகட்டும்,
ஊழலும் நீங்களும்
ஒழிந்தாலே அது போதும்.....
.... ஆதலால் காதல் செய்வீர் ....
காதல் வந்ததும்!
மெல்ல வாயடைக்கும்,
மேனி பூ பூக்கும்,
சொல்ல நினைத்ததெல்லாம்,
சொல்லாமல் நின்றுபோகும்...
5ம் 6ம் கூட அப்போது மறந்துபோகும்....
உயிர் உருகுவதாய் உடல் உணரும்,
உடல் உருகுகிறதே என்று உயிர் உருகும்,
நிழல் நிற்க நிஜம் சாயும்,
அவள் பார்க்க, அவன் பறப்பதுவும்,
அவள் பேச, அவன் குழைவதுமாய்,
வினாடிகளின் விலை உயரும்....
பூக்கள் மலர்வதே தெரியாத கண்களுக்கு,
பூமியே மலர்வது புலப்படும்....
காதல்தான் முதல் அனு என்பதும்,
காதல்தான் உயிரின் மூலதனம் என்பதும்
புரிந்துபோய் புரிந்துபோகும்....
பார்வையில் அம்புவிட்டு!
பாதி உயிர் பறித்துப்போனாய்...
பட்டுக் கன்னம் ஒட்டவெச்சு!
மொத்த உயிர் முறித்துபோட்டாய்...
நல்லவேளை!
உதட்டுவழி உயிர் கொடுக்கும்,
ஒரு வித்தை தெரிந்ததால்!
விட்டுப்போன என் உயிரை
நீ முத்தமிட்டே மீட்டெடுத்தாய்....
.... ஆதலால் காதல் செய்வீர் ....
காதல் வந்ததும்!
மெல்ல வாயடைக்கும்,
மேனி பூ பூக்கும்,
சொல்ல நினைத்ததெல்லாம்,
சொல்லாமல் நின்றுபோகும்...
5ம் 6ம் கூட அப்போது மறந்துபோகும்....
உயிர் உருகுவதாய் உடல் உணரும்,
உடல் உருகுகிறதே என்று உயிர் உருகும்,
நிழல் நிற்க நிஜம் சாயும்,
அவள் பார்க்க, அவன் பறப்பதுவும்,
அவள் பேச, அவன் குழைவதுமாய்,
வினாடிகளின் விலை உயரும்....
பூக்கள் மலர்வதே தெரியாத கண்களுக்கு,
பூமியே மலர்வது புலப்படும்....
காதல்தான் முதல் அனு என்பதும்,
காதல்தான் உயிரின் மூலதனம் என்பதும்
புரிந்துபோய் புரிந்துபோகும்....