ஆதலால் காதல் செய்க - மண் பயனுறவேண்டும் கவிதைப் போட்டி
.... ஆதலால் காதல் செய்வீர் ....
காதல் வந்ததும்!
மெல்ல வாயடைக்கும்,
மேனி பூ பூக்கும்,
சொல்ல நினைத்ததெல்லாம்,
சொல்லாமல் நின்றுபோகும்...
5ம் 6ம் கூட அப்போது மறந்துபோகும்....
உயிர் உருகுவதாய் உடல் உணரும்,
உடல் உருகுகிறதே என்று உயிர் உருகும்,
நிழல் நிற்க நிஜம் சாயும்,
அவள் பார்க்க, அவன் பறப்பதுவும்,
அவள் பேச, அவன் குழைவதுமாய்,
வினாடிகளின் விலை உயரும்....
பூக்கள் மலர்வதே தெரியாத கண்களுக்கு,
பூமியே மலர்வது புலப்படும்....
காதல்தான் முதல் அனு என்பதும்,
காதல்தான் உயிரின் மூலதனம் என்பதும்
புரிந்துபோய் புரிந்துபோகும்....