அருள்வாய்நீ அமுதத் தேன்-- பஃறொடை வெண்பா
அன்பே ! ஆருயிரே ! அழகான பொற்சிலையே !
தன்வலி பொறுத்து பிறரை காத்தோனே !
மனிதத்தை தொலைத்து விட்ட மானிடற்கு
தனிமனித நேயத்தை தரணியில் விதைப்போனே !
ஒளியாக வந்த உத்தமனே !இறைவேந்தனே !
துளிக்கூட அமைதியிலா துன்புறும் மானிடற்கு
காலத்தின் தேவைக்காய் காத்திடும் கடவுளே !
ஞாலத்தின் இருளகற்ற வந்த நற்பொருளே !
மானிடம் காக்க வந்த மகேசனே !
நானிலம் போற்றும் தாயுமான கடவுளே !
எமக்காய் பிறந்தவரே ! எம்மில் பிறந்தவரே !
தமக்கென நினையா தன்னல மற்றவரே !
பெருமானே ! உமையம்மை இடப்பாக ஈசனே !
அருள்வாய்!நீ அமுதத் தேன்.!