முளைத்தேன் உன்னால்

உன்னாலே முளைத்தேன்
பனியே பனிக்காற்றே
என் தேகம் ஒளிருதே
உனை பார்த்தே
என் மூச்சும் உனையே சேரும்
நம் உயிர் ஒன்றாகவே
கனவிலும் உனையே
நினைத்தேன் கனியே
எனையே காதல் செய்வாயே
வளைந்த உந்தன் மேனியில்
ஒளிந்துகொள்ள ஆசைதான்
பிரிந்து நீயும் போனால்
மறைந்து போவேன் உலகை விட்டு --(உன்னாலே)
எங்கேதான் போனாலும்
கண்ணில் தெரிவாய் நீயடி
கண்ணை விட்டு மறைய நினைத்தால்
இதயம் வந்து சேரடி
ஏனடி சோதனை
வேதனை தாங்கலியே
மூலிகை சேர்ந்த உன்
இதழும் என்னை சேரலியே
கூந்தல் வாச இடையிலே
மலரும் சேர்ந்து மயக்கி போக --(உன்னாலே)

எழுதியவர் : ஜேம்ஸ் (7-Feb-15, 3:12 pm)
பார்வை : 122

மேலே