மறதி
![](https://eluthu.com/images/loading.gif)
நினைக்க நினைக்க..
மறக்க நினைக்க..
நினைக்க நினைக்க..
மீண்டும்..மீண்டும்..
வந்து கொண்டே இருக்கிறது
நினைவில்..அந் நிகழ்வு !
கோபம்..கோபமாய்
வருகிறது..
சிந்தனைக் கயிறு
அறுத்து
உயர எழும்பி போக முடிகிறதா..
என்றால் அதுவுமில்லை..
என்னை கயிறு கட்டி உள்ளதா..?
நான் கயிறை
கெட்டியாய் பிடித்துள்ளேனா..?
கயிறை அறுத்தெறிய..
நினைவுகள் வருவது நின்று போனது..
எது கயிறு..?
மறந்ததை நினைக்க வைத்த பணியை..
செய்துகொண்டிருந்த நினைப்புதான் அந்த
கயிறு என்று பிறகுதான்
புரிந்தது..
இப்போது கயிறையும் உதறிய பின்..
ஏதோ ஒன்று..
அடிக்கடி நினைவில் வந்து
தொல்லை கொடுத்து கொண்டிருந்தது..
நினைவுக்கு வர மாட்டேன்
என்கிறது!
என்ன..அது....ப்ச்..!