போக்குவரத்து சாலைகள் ரத்து

நடை பாதை
உடை பாதி
இடைச் சறுக்கள்
விடையறியா சாலையது !

குடை மேலே
சீருடை கீழே
திருத்தம் செய்யா
நிறுத்தம் செய்யும் தானே !

பிரசவத்தின் வலி
பிற சவத்தின் வழி
இலவசமாய் சவாரி
இல(கு) வசமாய் குழந்தை !

போய்வருகிறேன் வசனம்
வாய் நிறைய சொல்லி
வண்டி பயணம் தொடங்க
மண்டியிட வைக்கும் மயான சாலை !

பளபளக்கும் கானல்நீர் நடுவே
பள்ளங்கள் புதைந்திருக்கும்
சடசடக்கும் சத்தங்கள் ஊடே
படபடப்பில் சறுக்கும் சவகிடங்கு !

எழுதியவர் : கனகரத்தினம் (7-Feb-15, 10:44 pm)
பார்வை : 66

மேலே