ஹத்தாமா ,,,, மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்காரி

இங்கு மின்சாரம் இல்லாமல்
இயங்கும் இயந்திரம் நான்
துன்பங்களை குத்தகைக்கு எடுத்து
இன்பங்களை அவர்களுக்கு கொடுக்கும்
இக்கட்டுக்கு தள்ளப்பட்டு
வாழ்வின் முகவரி அற்றவள்
பெற்றோர் சிந்திக்காத குடும்ப பொருளாதாரம்
சகோதர சகோதரிகளின் சுயநலம்
இரவில் மட்டும் ஆணாகும்
கணவனின் பலவீனம் எல்லாமே
இந்த பெயருக்குள் தள்ளி விட்டது என்னை
கடவுச்சீட்டில் கடன் பட்டு
கடல் கடந்து
காலங்களை கண்ணீரில் கழுவும் துர்ப்பாக்கியவாதி
இங்கு புதுவிதம்
அதிலும் பலவிதம் - இவர்களின்
சீண்டலுக்கும் முரண்பாடுகளுக்கும் பலி தீர்க்கும்
பொதுத்தண்டனை வாங்கி ,,,,
ஊருக்கென்ன தெரியும் ஒரு கனம் மனசு
தெரிந்தும் என்ன செய்ய ,,,,
ஒப்பாரி இரவுகளின் சொந்தக்காரி நான் .
இல்யாஸ் இப்றா லெவ்வை
பொத்துவில்
இலங்கை

எழுதியவர் : (7-Feb-15, 11:38 pm)
சேர்த்தது : Ilyas Ibra Lebbe
பார்வை : 57

மேலே