உணர்ந்தால் உண்டு உணவு
பூ பந்தா பூமி ?
தீ வைக்கும் மூடா!
கை வைக்காமலே நீயும்
பை வைக்கலாமா ?
கால் பந்தாய் உதைத்தால்
பால் தந்திடுமா சாமி!
ஊன் உண்ணும் மனிதர் மேனி
வீண் என்று அறிந்தால்...
வான் தந்த மழையால்
தான் வாழ நினைத்தாலும்
சான் வயிறு பெருக்குமா ?
நான் என்ற செருக்கங்கு முளைக்குமா ?
பஞ்சமதை அவமதித்து
பஞ்சணை மோகத்தில் நாம் வீழ
பஞ்ச நிலங்களை தொலைத்து
பஞ்சத்தில் நாம் தவிக்கின்றோமே !
என் சான் உடலுக்கு சிரசே பிரதானம்!
பஞ்ச பூதத்திற்கும் பூமியே ஆதாரம்!!
அறுவடை செய்து தழைத்த நிலத்தை
அறுவை செய்து விரைந்து அழித்தபின் !
வறுமை என்று வருந்தி என்பயன் ?
வாழ்வாதாரம் தொலைத்து வணங்கி என்பயன் ?
வருங்காலம் நினையாது நம் வாழ்வும் செழிக்காது
சந்ததியின் சோகம் தீர்ப்பதாயென்னி சேர்க்கிறோம் தினம் சோகம் !!