ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர்...!
(மண் பயனுற வேண்டும் கவிதை
போட்டி)

காக்கை குருவி
எங்கள் சாதியெனும்...
அன்பே தவமாகும்
ஆதலினால் -
காதல் செய்வீர்...!

அடுக்களை தோறும்
கூட்டுக் குடும்ப
மணம் வீச வரும்...
அன்பே தவமாகும்
ஆதலினால் -
காதல் செய்வீர்...!

பசிபிணி போக்க
நல்கும் படையலாம்
அமுது செய்யும்...
அன்பே தவமாகும்
ஆதலினால் -
காதல் செய்வீர்...!

பழுதில்லா வித்தினிலே
பூத்த காய் கனித்தரு...
அன்பே தவமாகும்
ஆதலினால் -
காதல் செய்வீர்...!

விண்துளியை மண்தூளி
மடியில் சே(மி)க்கும்....
அன்பே தவமாகும்
ஆதலினால் -
காதல் செய்வீர்...!

விடுதியிட்டு வாட்டாது
முதுமைதனை பேணும்...
அன்பே தவமாகும்
ஆதலினால்
காதல் செய்வீர்...!

நொடியல்லாம்
நுன்மை நுகரும் மதி...
அன்பே தவமாகும்
ஆதலினால் -
காதல் செய்வீர்...!

ஈரிதயம் இழைவதிலே
சந்தனமாய் கமழும்...
அன்பே தவமாகும்
ஆதலினால்
காதல் செய்வீர்...!

நெகிழியிட்டுப்
பூதலத்தை
நிர்மூலமாக்காத...
அன்பே தவமாகும்
ஆதலினால் -
காதல் செய்வீர்...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (8-Feb-15, 12:25 am)
பார்வை : 67

மேலே