காதல் வெண்பா மாலையின் உறவு நீ 6

காதல் அந்தாதியின் 6 வது பா
சற்று மாற்றி இலக்கண விதிப் படி வெண்பாவில் அமைத்திருக்கிறேன்

கயல் விழியோரம் காதல் சொன்ன நேரம்
புதுத் தென்றல் வீசிய பொன்னந்திநேரம்
புயல் வந்த மாலையிலும் தவறாமல் வருவாய்
அது தந்த உறவன்றோ நீ என்னுயிரே !

========================================================================
மாறிய வெண்பா வடிவம் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கயல்விழி யோரம்கா தல்சொன்ன நேரம்
பூந்தென்றல் வீசியபொன் னந்தி மாலை
புயல்வந்த போதிலும் தவறாமல் வந்திடுவாய்
அந்தவுறவன் றோவுயிரே நீ !

--------------------------------------------------------------------------------------------------------------------
ஆர்வலர்கள் படிக்கவும் ரசிக்கவும் முயலவும்.
தேர்ந்தவர்கள் பிழை சுட்டலாம்
---------------கவின் சாரலன்
டாக்டர் கன்னியப்பன் பிழை சுட்டிக் காட்டியிருக்கிறார்
ஆகையால் செப்பனிட்டு தூய வெண்பாவாக்குவது கடமை
அசை பிரித்து சுட்டப் பட்ட பிழைகளைப் பார்ப்போம்

கயல்விழி யோரம்கா தல்சொன்ன நேரம் $ 1
---------------------------------------------------------------------------------------------------------------------
நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
கருவிளம் தேமாங்காய் தேமாங்காய் தேமா
(விளம் முன் காய் முன் நேர் விதிப்படி முதலடி சரி )

பூந்தென்றல் வீசியபொன் னந்தி மாலை
* 1நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் * 2நேர் நேர்
தேமாங்காய் கூவிளங்காய் தேமா தேமா
(*1 *2 மாமுன் நிரை இல்லை தளை தட்டுகிறது )
அடியை இப்படி மாற்றுகிறேன்
புதுத்தென்றல் வீசியபொன் னந்திப் : பொழுதே $2
------------------------------------------------------------------------------------------------------------------
நிரை நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நிரை நேர்
புளிமாங்காய் கூவிளங்காய் தேமா புளிமா
(காய் முன் நேர் மா முன் நிரை ---வெண்பாவடி சரி )

புயல்வந்த போதும் தவறாமல் வந்திடுவாய் $3
---------------------------------------------------------------------------------------------------------------------
நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நிரை நேர்
புளிமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
(போதிலும் *3--போதும் காய் முன் நேர் மா முன் நிரை சரி )

அந்தவுறவன் றோவுயிரே நீ
நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நேர்
கூவினங்கனி *4
(கனிச்சீர் வெண்பாவில் வாராது பிழை )

இப்படி அடியை மாற்றுவோம்

அவ்வுறவே இன்னுயிரே நீ $4
-------------------------------------------------------------------------------------------------------------------------
நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நேர்
கூவிளங்காய் கூவிளங்காய்
( காய் முன் நேர் வர இப்பொழுது அடி சரி )

திருந்திய $ அடிகளை எழுதுவோம் :
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கயல்விழி யோரம்கா தல்சொன்ன நேரம்
புதுத்தென்றல் வீசியபொன் னந்திப் பொழுதே
புயல்வந்த போதும் தவறாமல் வந்திடுவாய்
அவ்வுறவே இன்னுயிரே நீ

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
படம் : குற்றால அருவி ; மலை எழுதும் வெண்பா
ஆற்றல் மிக்க அருவி பாவுக்குள் அடங்குகிறதா முயன்று பாருங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-15, 5:34 pm)
பார்வை : 179

மேலே