நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும்

நெஞ்சு பொறுக்குதில்லையே
உள்ளம் தவிப்பதினால்

பலகோடியில் திரைப்படகண்னோட்டம்
அதற்கு ஒரு முன்னோட்டம்
பாவம் இப்படித்தான் செல்கிறது
சுதந்திரதின கொண்டாட்டம்
வெகுநாட்களாய் வீணாய்......!

காந்தியடிகள் பிறந்தநாள்
மதுபானக்கடை விடுமுறை
கள்ளசரக்கு கிடைக்கும் நாள்.......!

நெஞ்சு பொறுக்குதில்லையே


சாலையில் விபத்து
மக்களின் அதிகபச்ச உதவி
“ஐயோ பாவம்”

நெஞ்சு பொறுக்குதில்லையே

கற்பழிப்புசெய்திகள் இல்லாமல்
விற்பதே இல்லை நாளிதழ்கள்

அகராதியில் தேடியபோதுதான்
அகப்பட்டது “சத்தியம்” என்னும்
சொல்லின் அர்த்தம்

நான் சொல்வதெல்லாம் உண்மை
நீதிமன்றத்தில் பொய்சாச்சி
காயலாங்கடை கணித புத்தகமானது
புனிதநூல்

நெஞ்சு பொறுக்குதில்லையே
உள்ளம் தவிப்பதினால்
உண்மையை நான் கூறிவிட்டேன்
உணர்த்தால் உங்களை
மாற்றிகொள்ளுகள்

எழுதியவர் : சந்திர சேகர் ஸ்ரீனிவாசன் (8-Feb-15, 7:47 pm)
பார்வை : 119

மேலே