என் இன்னொரு உயிர் நட்பு

நட்பின் அழகெல்லாம் இருக்கும் விழிகளிலே
நானும் வாழ்ந்துவிட்டேன்
பிரிவு என்னும் வார்த்தை நானறியேன்
தாய்மை என்பது தாய்க்கு மட்டுமில்லை
நட்புக்கும் உண்டு உணர்ந்தேன் உன்னால்
இன்று யார் சொல்லி என்னை
தேற்ற கூடும்
யாருக்காக வந்து சாய என் தோள்கள் வாழும்
விண்ணுலகம் செல்லும் முன்
என் விதி முடியபோகிறதேன்று
தெரிந்து தான் சென்றாயோ
என்னை பிரிய மனம் கொண்டாயோ
நான் மட்டும் தனியே வாழ
எப்படி இதயம் துடிக்கும் நட்பின்றி
என்று ஒருமுறையேனும் யோசித்தாயா
சில மணித்துளிகள் தான் வித்தியாசம்
உனக்கும் எனக்கும் இதோ வருகிறேன்
விண்ணிலும் நம் நட்பை தொடர
(நண்பனின் பாதங்களுக்கு என் சமர்ப்பணம் )