சுக்கு நூறாய் சிதைந்த இதயம்.....

"பெண்ணே...
உன் புன்னகையை
கொஞ்சம் நிறுத்தி வை....

இதுவரையும்
நீ (வ)சிதைத்த
இதயங்கள் போதும்...."

இதழ்கள் போலியாய்
இவ்வாறு முனுமுனுக்க....

சுக்கு நூறாய்
சிதைந்த இதயம்....
மீண்டும் ஒட்டிக்கொண்டு
கேட்கிறது....

"எப்போது என்னை பார்த்து....
மீண்டும் புன்னகைப்பாய்
அன்பே....?"

எழுதியவர் : நி. அசூமத் (Erukkalampiddy ) (21-Apr-11, 12:18 pm)
சேர்த்தது : N.Asoomath
பார்வை : 339

மேலே