எந்திர ஏர்

எந்திர ஏர் கொண்டு
உழுவான் இளைஞன்
நில்லாது பொழியும் வானம்
எழுச்சியுடன் ஓங்கி
வேளாண்மை வளம் கொழிக்கும்
நெற் களஞ்சியம் அம்பாரமாய்
குவிந்து கிடக்கும்
புதுக் கரும்புடன் புதுப் பானையில்
பொங்கல் பொங்கி வர
புனககை பூத்து நிற்பார்
இனி இங்கே
வறுமை இல்லை என்று
ஒரே குரலில்
குலவை இடுவர் பெண்கள் !
~~~கல்பனா பாரதி~~~
குலவை : விழா பண்டிகை வழி பாடுகளின் போது வார்த்தைகள் இன்றி
கிராமப் புறங்களில் பெண்கள் இணைந்து ஒரே குரலில் எழுப்பும்
குரலோசை .

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Feb-15, 10:14 am)
Tanglish : endira yer
பார்வை : 79

மேலே