ஆகாச வீடு-வித்யா

ஆகாச வீடு-வித்யா

பற்றுதலுக்காக ஏங்கிய
கொடிதனைத்தாங்கும்
மரக்கிளையின் காதல் கவி

நாவின் சுவைமொட்டுக்களில்
பூத்திருந்த காதல்பூவின்
வாசம் வனமெங்கும்

நனைதல் பொருட்டு
குடைக்காம்பு முறித்து
குதூகளித்திருந்தது
அவன் மழை

அக்கவிஞனின் வரிகளை
வாசிக்க வாசிக்க
கண்ணீர் வழிய வழிய
காட்சிகள் விரிகின்றன

பால் பிழிந்த
தேங்காய்ப்பூவென
காதல் சுமந்து நிற்கும்
தருணங்களில் தென்றலாய்
வருடும் கவியென அவன்

அந்தக் கவிஞனின் வரிகள்.......

கடவுளின் கண்களைக் கேட்கின்றன
காற்றின் கால்களைத் தேடுகின்றன
சமன்பாடுகளைத்
தீர்த்துக் கொண்டிருந்தன

பின் ஒவ்வொரு எழுத்தாகக்
குத்திக் கிழித்து இரத்த வெள்ளத்தில்
சிரித்தும் பின் அழுதும்
ஆர்பரித்துக் கொண்டிருந்தது

தாமதத்திற்கு வருந்துகிறேன்
எனும் வாசகத்தோடு
நான் நுழைகையில்
எனை இறுக அனைத்து
என்மார்போடு சாய்ந்துக்கொண்டது

இதற்குமேல் சொல்ல
எனக்கு திராணியில்லை

மங்கிய ஒளியில்
அந்த ஆகாச வீட்டில்
அவன் வசிக்கிறான்
நான் வாசிக்கிறேன்

எழுதியவர் : வித்யா (9-Feb-15, 7:03 pm)
பார்வை : 133

மேலே