காதல் கடிதம் - உதயா

நிலவாக முகத்தைக் கண்டேன்
தாயாக அகத்தைக் கண்டேன்
இமையாகப் பூவைக் கண்டேன்
விழியாகப் பரிதியைக் கண்டேன்
செவ்வானாய் இதழைக் கண்டேன்
பார் கடலாய் சிரிப்பைக் கண்டேன்
தேனாக பேச்சைக் கண்டேன்
முத்தாக பற்கள் கண்டேன்
கார்முகிலாக் கூந்தலைக் கண்டேன்
பிறையாக கழுத்தைக் கண்டேன்
காற்றாக இடையைக் கண்டேன்
என்னை நான் உன்னில் கண்டேன்
உன்னை நீ என்னில் கண்டாயா ?

எழுதியவர் : udayakumar (9-Feb-15, 6:41 pm)
பார்வை : 139

மேலே