மூங்கில் காதல்

நீ துளையிட்டு சென்ற இடம்
இன்றும் நெஞ்சில் வடுவாய்....

நீ தொலைந்துசென்றபின்
காற்று தினம் தாலாட்டு பாடி ராகமிசைக்கிறதடி எனக்கு!

ஏய் பொன்வண்டே!

எனையே சுற்றிவந்த நீ
என் காதலியா...
இல்லை
இந்த காற்றா!

மூங்கிலாய் நான்...!
காற்றின் மடியிலேயமர்ந்து -தினம்
அசைந்து ஆடிக்கொண்டிருகிறேன்!

எழுதியவர் : மகேந்திரன் (9-Feb-15, 7:52 pm)
Tanglish : moonkil kaadhal
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே