குறத்திப் பாட்டு - உதயா

வீடான நாட்டினிலே
வீடு சொந்தமில்லையம்மா
ஊர் ஊராய் அலைந்துச் சென்றே
தெருவினிலே தான் வாழுகின்றோம்

கோடான கோடி மக்கள்
கூடி வாழும் உலகினிலே
ஊரின் எல்லையில் வாழ்ந்துவரும்
ஒதுக்கப் பட்ட குறவர் நாங்கள்

அரசாங்கம் உள்ளதையா எம்
அவலநிலையையும் கண்டதையா
காலில் ஒட்டும் தூசியென நினைத்தே
அவங்க மதியும் சிந்திக்க மறுக்குதையா

ஆங்கங்கே உள்ள மலைகளெல்லாம்
எம்மின மக்களின் சொர்க்கமையா
வாழ வழியொன்று இல்லாமல் எங்க
சாதி ஜனம் பொலம்புதையா

வழிகாட்டும் புண்ணியவாங்க எங்க
குலதெய்வம் தானுங்கையா
குலதெய்வத்தை தேடி தேடி
கும்பலாத அலையிரோமையா .......

எழுதியவர் : udayakumar (10-Feb-15, 5:39 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 112

மேலே