காதல் வெண்பா வான்நிலவு 8
காதல் அந்தாதி 8வது பா
வெண்பாவாக இங்கே :
========================================================================
உணர்வுகள் பூக்கும் மனமலர்த் தோட்டமோ
கனவுகள் விரிக்கும் காதல் பூம்பொழிலோ
உணர்வுகள் பேசா இதழ்களின் மௌனமோ
நினைவில் நடப்பவளே வாழ்வில் வளர்நிலவே !
========================================================================
மாற்றப்பட்ட வெண்பா வடிவம் :
-----------------------------------------------
உணர்வுகள் பூக்கும் மனமலர்ப் பூங்கா
கனவுகளில் காதல் மலர்விரிக்கும் பூம்பொழில்
தேனிதழில் தித்திக்கும் செந்நிறப் பூமலர்
வான்நிலவு நீயன்றி யார் ?
--------------------------------------------------------------------------------------------------------------------
வெண்பா விதிக்கு உட்பட்டிருக்கிறதா பார்ப்போம் :
உணர்வுகள் பூக்கும் மனமலர்ப் பூங்கா
நிரை நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நேர்
கருவிளம் தேமா கருவிளம் தேமா
கனவுகளில் காதல் மலர்விரிக்கும் பூம்பொழில்
நிரை நிரை நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை
கருவிளங்காய் தேமா கருவிளங்காய் கூவிளம்
தேனிதழில் தித்திக்கும் செந்நிறப் பூமலர்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நிரை
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளம் கூவிளம்
வான்நிலவு நீயன்றி யார் ?
நேர் நிரை நேர் நேர் நேர்நேர் நேர் (நாள் போல் )
கூவிளங்காய் தேமாங்காய்
-------------------------------------------------------------------------------------------------------------------
மா முன் நிரை விளம் முன் நேர் காய் முன் நேர் பெற்று ஈற்றுச் சீர்
ஓரசையில் "நாள்" போல் அமைக்கப் பெற்று நான்கு சீர் கொண்ட மூன்று
அளவடிகளையும் ஈற்றடி மூன்று சீர்களும் கொண்டு தனிச்சொல் வாரா
இன்னிசை வெண்பாவாக நடக்கிறது .
ஆர்வலர்கள் படிக்கவும் ; முயலவும் . யாப்பிற்கு தமிழன் நன்றி செய்யவில்லை
என்ற இழிசொல் நம்மில் சிலரால் நீங்கட்டும்
-----அன்புடன், வெண்பா நாடன் கவின் சாரலன்