பிரிந்தது சாதியில் இப்போது நான் வீதியில்

"அவளும் ஒரு கவிதை எழுதினால் எனக்கு கடைசியாக "

என் விழியில் கண்ணீர் நின்று பலமுறை மறைத்ததடா
நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்!

விதை நட்டேன் என் தோட்டத்தில் கள்ளிச் செடியாக மலர்ந்தது
ஆனாலும் மணந்தேன் பின்புதான் காதல் செடியாகவே போனது!

பிரிந்துவிடுவோம் என்று சொல்லும் உதட்டிற்கு தெரியாது அதன் வலி
அதை உணரும் இதயத்திர்க்குத்தான் தெரியும் அதன் வலி !

நிம்மதி கொடு என்றான்
என்னைக் கொன்று நிம்மதிக் கொடுப்பேன்
அப்போதாவது வேறு ஒருவளை மனக்கமாட்டான் என்பதற்காக!

நான் இறந்தால் பிறர் சொல்வார்கள்
அவளது வாழ்வில் அவனால்தான் சந்தோசமே போனது என்று!
ஆனால் நான் இருந்தால் சொல்வேன்
அவனால்தான் எனக்குள் சந்தோசமே பிறந்தது என்று!

ஒரு சொட்டுக் கண்ணீரில்
ஆயிரம் உருவங்கள்
உன் முகமாக
" இந்த அடிபட்ட கண்ணில்"

தேம்பி அழுதுருக்கிறேன் சிறு வயதில் பால் இல்லை என்பதற்காக
இன்று அழுதே தேம்பி விடுகிறேன் நி இல்லை என்பதற்காக!

" அறிவியலின் காரணமாக இந்த உலகமே மாறியது
ஆனாலும் மாற மறுத்தது ஒன்றுதானே
அது இந்த சாதிதானே """"""""""

"நம்மைத்தான் பிரித்தார்கள் சாதி ஒன்று இல்லை என்று

நம் காதலை அல்ல""""""""""""


BY
J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL DEPARTMENT
VEL TECH HIGH TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNAI.......

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (10-Feb-15, 6:40 pm)
பார்வை : 59

மேலே