ஓட்டுச் சந்தை

எலக்சன் வருமுன்னே
எங்க - முகம் பார்க்குமய்யா.....
எழுத படிக்க தெரியாத இந்த ஏல
குரை கேலுமய்யா...
பொழுது புலருமுன்னே
பொருப்பாய் விழித்தெழும்பி..
சட்டி அடுப்பில் வச்சி
சமயல் வேலை பண்ணிடுவோம்
பத்தாவது படிக்கும் மகன்
பள்ளிக்கூடம் போகும் முன்னே
படங்கு இடுப்பில் கட்டி
நாங்க பயனவச்சி நின்றிடுவோம்
கொட்டும் மழையின்லும்
சிட்டாய் பறந்தோடி
பத்து மணிக்கு முன்னே
நாங்க பத்து கிலோ போட்டிடுவோம்
அந்தி சாயும் போது
அஞ்சாறு வெறகு பொருக்கி...
அடுப்படிக்கு வந்து மீண்டும்
அந்தி சமயல் பண்ணிடுவோம்...
கள்ளுகட போன புருசன்
கையூனி வரும்போது...
வேதன தாங்காம - நாங்க
வெரும் வயிற்றில் படுத்திடுவோம்..
ஓட்ட வீட்டிலுள்ள
ஓடெல்லாம் தன்னி கொட்ட
வீட்ட கழுவி - நாங்க
விடிய விடிய முளிச்சிருப்போம்
இந்த வேதன தீரவென்று
வேண்டியத பன்னி தந்தா...
ஓட்டு போட்டிடுவோம் - அய்யா
உம்ம ஒசத்தி வச்சி பேசிடுவோம்.....
(தேர்தலின் போது தொகுதிக்கு ஓட்டு
கேட்டு வந்த அரசியல் வாதியிடம் தங்கள் குறையினை கூறி அப்பிரதேசத்தில் உல்ல மதுபான கடையினை மூட சொல்லியும்
தங்கள் வீட்டு கூரையினை செய்து தரவும் சொல்லி கேட்ட கொழந்து பறிக்கும் பெண் தொழிலாளி கூறியதயே கவிதயாய் சொல்லியிருக்கிறேன்...)