நிலவே எனக்கு வரம் தா
மேக இடை வெளியில்
மோக நடை போடும்
என் பூலோக துணை கோலே
தனித்து திரியும்
என் காதல் உலகிற்கு
அந்த தாரகையை
துனையனுப்பிவை....
வெந்து எரிந்து
வேகமாய் சென்று விடாமல்
மென்மையாய் ஒளிர்ந்து எமை
மெய்சிலிர்க்க வைப்பது போல்
என் காதலின் வேட்கையில்
நான் காணமல் போய்விடாமல்
என் தேவதையின் பார்வைக்குள்
நான் தித்திக்க வரம் தா...
பறந்து விரிந்த
எங்கள் காதல் பயணம்
வளர்ந்து தேயும்
உன் வாழ்க்கை போல்
களைந்து மறைந்து போகாமல்
உன் பௌர்ணமி நிலை போல் பிரகாசிக்க
பல் நிலவே எனக்கு வரம் தா.....
கால இடைமற்றத்தல்
மேக இடைவெளியில் மறைந்து
நீ மீள வராமல் போவதுபோல்
இன்னல்கள் நேரும்போது
என்னவள் எனை பிரியாதிருக்க
வெண்ணிலவே எனக்கு வரம் தா.....