சொன்னா வெட்ககேடு

மதவாதத்தை ஒழிக்கணும்னு
தெரு பிரசாரத்தில் சாதி கட்சி !

ஏகாதிபத்யத்திற்கு எதிராக
புரட்சியில் இறங்கியது பதவி இழந்த கூட்டம் !

நல்லதை சொல்வோம் நன்மையை செய்வோம்
வாக்கு நேரத்தில் அரசியல்வாதியின் வாக்குறுதி !

உண்ணாவிரத போராட்டம் அநீதிக்கு எதிராக
பந்தலில் பின்னால் பிரியாணி வாசம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என ஆரப்பித்தார் தலைவர்
ஆறுமுறைக்கு மேல் முதல்வர் நாற்காலியில் ஆண்ட நாயகன்!

எழுதியவர் : கனகரத்தினம் (10-Feb-15, 9:58 pm)
பார்வை : 79

மேலே