பச்சை குடிசைக்குள் நீ

பச்சை குடிசைக்குள்
உன்ன வச்சு
பக்குவமா பார்க்கும்
போதே நீ பருவம்
அடைந்து விட்டாய்
என எண்ணி விட்டேன்..

பருவம் அடைந்த என்
உள்ளம் பச்சை குடிசைக்குள்
பக்குவமாய் நுழையவே
பாடாய் படுத்துகிறது
பறந்து வரவா
பார்த்து சொல்லி விடு..

பச்சை குடிசைக்குள்ளே
இச்சைகள் தீர்த்து
அச்சம் இல்லாமல்
அழகாய் வாழ
பரிசம் போடுகிறேன்
பச்சை குடிசைக்குள்ளே..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (11-Feb-15, 1:03 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 82

மேலே