என் தமிழே

என் தமிழே!
கருவில் அன்னை
சொல்லித்தந்த
மழலையும் தமிழே!
அம்மா என்று
முதலில் கூக்குரலிட்டு
இதழ்கள் அசைந்தாடியதும்
தமிழாலே!
அன்னை ஊட்டிய அன்னம்
பாசம் என உனர்ந்தேன்
தமிழால்!
என் உள்ளத்திற்கு தமிழோடு
காதல். என் உயிரோடு
தமிழுக்கு காதல்
பூக்களின் மொழியும்
தமிழே! சிந்தும் தேனை
குத்தி உறிஞ்சும் புள்ளி
வண்டுகளும் தமிழேனும்
ஓரினம்தான்!
மலையை அறைந்து
செல்லும் தென்றலும்,
தமிழில் கவி பாட,
முல்லை பண்ணையில்
பாணனின் குழல் ஊத
மலரும் இன்னிசையும்
தமிழில் ராகம் பாடும்
சப்தம் கேக்குதடா!
என் செவிகளில்....
நிலத்திற்கு முத்தமிட்டு
திரையோடு நடனமாடும்
நீலக்கடலும் படித்தது
தமிழ் காவியமே!
தமிழில் நான் கவி
பாட செந்தாமரை
புன்னகை பூக்க
ஓடிச்செல்லும் நதிகள்
கழியிட நாரையிடம்
தமிழேனும் தூது
சொல்ல, சோலைக்
கருங்குயில் சொல்லத்
தெரியாது கு,,கு,கு,..என்று
இசைக்கும் தொனியும்
அழகு தமிழினால்......!
தமிழெனும் மூன்று
எழுத்துக் கவியால்
நாவில் தேனூறி,
உள்ளத்தில் தமிழெனும்
கல்வெட்டு செதுக்கி,
கவிஞன் பட்டம் தந்து,
அன்னமெனும் பிச்சை
தந்ததும்,என் செந்தமிழ்.
ஈன்ரொளோடு மெய்யான
பாசம் கொண்டவன்
தமிழின் நேசத்தவனே..!